த்ரிஷா & ரசிகர்கள் லடாய் தீர்ந்தது
இனி கொடி, கட்-அவுட் வைப்பதில்லை, பாலாபிஷேகம் செய்வதில்லை என்று ஒப்புக்கொண்டதையடுத்து, ரசிகர்களுக்கும் த்ரிஷாவுக்கும் இடையில் இருந்துவந்த மோதல் முடிவுக்கு வந்தது.
நடிகை த்ரிஷா பெயரில் மன்றம் தொடங்கிய ரசிகர்கள், அவருக்கு தனிக்கொடியை அறிமுகப்படுத்தினர். ஆங்காங்கே த்ரிஷா கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகமும் நடந்தது. இது முட்டாள்தனம் என்று த்ரிஷா ஒரு பேட்டியில் கூறியதால், ரசிகர்கள் கொதிப்படைந்தனர்.
த்ரிஷா இப்போது ஐதராபாத்தில் ஷ¨ட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். ரசிகர்களின் கொதிப்பு குறித்து த்ரிஷாவின் தாய் உஷா, Ôதமிழ் முரசுÕ நிருபரிடம் கூறுகையில், கொடி, கட்-அவுட் என ரசிகர்கள் ஆடம்பர செலவு செய்வதில் த்ரிஷாவுக்கு இஷ்டமில்லை. ஏழைகளுக்கு ரசிகர்கள் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். ஐதராபாத்தில் இருந்து வந்த பிறகு, சென்னை ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திருக்கும் கேன்சர் இல்ல நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்துகொள்வார்ÕÕ என்றார்.
ரசிகர் மன்றத் தலைவி ஜெசி கூறுகையில், ÔÔஆடம்பர செலவுகளை தவிர்த்துவிட்டு, த்ரிஷா பெயரில் தொடர்ந்து நற்பணிகள் செய்வோம். அவர் பெயரில் ரத்த வங்கி தொடங்க வேண்டும் என்பது எங்கள் லட்சியம் என்றார்.

0 Comments:
Post a Comment
<< Home